வல்லாரை தேநீர்
நமக்கு நன்கு பரிச்சயமான வல்லாரை கொட்டு கோல என்றே மேலை நாடுகளில் அறியப்படுகிறது. ஞாபக சக்தி உள்ளிட்ட பல நற்பயன்களை செய்யும் வல்லாரை உணவின் ஒரு அவசிய அங்கமாக அமைந்து விடுகிறது. தேநீர் பைகளில் இது இருப்பது நினைத்த மாத்திரத்தில் உற்கொள்ளக்கூடிய வசதியை தருகிறது. தூய்மையா சிறிய வகை வல்லாரை இலைகளை கொண்டு எமது தேநீர் தயாரிக்கப்பட்டுள்ளது
மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட பிஞ்சி இலைகள் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும்.
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில் உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை.
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார்.
வல்லாரை பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம்