முருங்கை இலை தேநீர் 
ஆரோக்கிய வாழ்விற்கு  அளப்பரிய நண்மைகளை தரும் முருங்கை இன்று சர்வதேச அங்கீகாரத்தை வென்றுள்ளது. விசேஷமான உணவு என்று தேகாரோக்கியம் பற்றிய சஞ்சிகைகள் புகழ்கின்றன. 
இயற்கை முறையில் பயிர்செய்யப்பட்ட இளம் முருங்கை இலைகளை கொண்டு எமது முருங்கை தேநீர் தயாரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட பிஞ்சி  இலைகள்  தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும். 
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில்  உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை. 
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார். 
*முருங்கை பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம் 

 
					             
							 
					             
							

