செவ்வரத்தம் பூ தேநீர் 
தமிழகத்தில் செம்பருத்தி என்றும் ஈழத்தில் செவ்வரத்தம் பூ என்றும் அழைக்கப்படும் இரத்தத் சிவப்பு நிறத்திலான இந்த அழகிய மலர் நலவாழ்வுக்கு ஏற்ற உன்னதமான ஒன்று. மீண்டும் பருகத்தூண்டும் சுவையும் நறுமணமும் கொண்ட செம்பருத்தி தேநீராகும் போது கிரான்பெரி பழம்  போன்ற சுவையையம் அழகிய சிவப்பு நிறத்தையும் வெளிப்படுத்தும். 
மனதையும் உடலையும் இதமாக்கி  அழுத்தத்தையும் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். 
செயற்கை இரசாயனங்கள் ஏதும் இன்றி மிகவும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட செம்பருத்தி பூக்களை மாத்திரமே கொண்டு தயாரானது இந்த தேனீர்.  சிந்தாமல் சிதறாமல்  நினைத்தவுடன் உடனடியாக போட்டுப் பருக தயாரிக்க வசதியாக தேநீர் படிக்கட்டுகளில் தேநீர் வருகிறது.
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார். 
  மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட பூக்கள் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும். 
* செம்பருத்தி பூ பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம் 

 
					             
							 
					             
							

