சக்கரை கொல்லி - சிறுகுறிஞ்சா தேநீர்
சக்கரை கொல்லி, சிறுகுறிஞ்சா, சிறுகுறிஞ்சான் என்று பல பெயர்களில் அறியப்படும் இந்த அபூர்வமான மூலிகை இன்று பாரிய அளவில் நன்மை செய்யும் மூலிகை என்னும் அந்தஸ்துக்கு வந்துள்ளது. கசப்பு சுவை கொண்ட கொடிகளுடன் படர்ந்து வளரும் இந்த தாவரம் இன்று தேடிக் காக்கப்படும் மூலிகை.
மிகவும் கவனமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூலிகை தேநீரை ஆண் பெண் இரு பாலரும் அருந்தி பயன் பெறலாம்
மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட பிஞ்சி இலைகள் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும்.
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில் உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை.
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார்.
*சிறுகுறிஞ்சான் பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம்