இஞ்சி தேநீர் 
நன்மைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் இஞ்சியின் மகத்துவம் என்றும் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் பரவியுள்ளது. வீரியமும் சுவையும் அதிகமுள்ள நல்ல வகை இஞ்சியை தேடி எமது தேநீரை தயாரித்துள்ளோம். உடலுக்கு வெப்பம் கலந்த ஆரோக்கியத்தையும் மனதுக்கு உற்சாகத்தையும் தரவல்ல எமது இஞ்சி மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்.
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில்  உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை. 
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார். 
*இஞ்சி  பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம் 

 
					             
							 
					             
							

