கொய்யா இலை தேநீர் 
கொய்யா இலையின் மகத்துவம் இன்று உலக அளவில் அறியப்பட்டு வருகிறது. கொய்யா பயிர்செய்கை இல்லாத மேலை நாடுகளில் வாழும் எம்மவர்க்கு கொய்யா இலை தேநீர் பைகளில் கிடைக்க செய்வது எமது நோக்கம்.  பல நன்மைகளை செய்யும் கொய்யா கொழுந்து பற்றி பல ஆய்வுகள் அண்மைய காலத்தில் வெளிவந்துள்ளதால் எல்லா நாடுகளிலும் மக்கள் கொய்யா இலையை தேடி உட்கொண்டு வருகின்றார்கள். எமது கொய்யா தேநீர் இளம் கொழுந்துகளை மட்டும் கொண்டு பக்குவமாக தயாரிப்பட்டுள்ளது.
மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட பிஞ்சி  இலைகள்  தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும். 
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில்  உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை. 
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார். 
*கொய்யா இலை பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம் 

: Could not find asset snippets/gl_image_format.liquid) 
                      
                      
					             
							 
					             
							 
					             
							


